கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் பெண் மனு
கணவரை கொலை செய்தவர்களை கண்டு பிடித்து தண்டனை வழங்க கோரி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மொழிஅரசிடம் பெண் மனு கொடுத்துள்ளார்.
கரூர்,
மனு
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சென்ன சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவிஅபிராமி(வயது 24). இவர் தனது உறவினர்கள் சிலருடன் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மொழிஅரசிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கரூர் ஆரியூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும், நானும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டோம். நான் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் ஜாதியை சேர்ந்தவள். எனது கணவர் வேறு ஜாதியை சேர்ந்தவர். நாங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் எனது கணவர் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து எங்களை இழிவாக நடத்தினர். இதனால் நாங்கள் எனது தாய் வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தண்டனை
அதன்பிறகு எனது கணவர் அவரது பெற்றோரிடம் சமாதானம் பேசி அழைத்து செல்வதாக கூறினார். இதைத்தொடர்ந்து எனது கணவர் அவரது பெற்றோர் வீட்டில் தங்கி இருந்து அவ்வப்போது என்னையும், எனது குழந்தையும் வந்து பார்த்து விட்டு செல்வார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி எனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது. எனவே எனது கணவரின் மரணம் தற்கொலை அல்ல. தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த என்னை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் எனது கணவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே எனது கணவரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story