கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் கலெக்டரிடம் மனு
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.
கூட்டத்தில் அறந்தாங்கியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு கணினி அறிவியல் பயிலும் மாணவ, மாணவிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் வகுப்பில் மொத்தம் 35 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நாங்கள் அனைவரும் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்கள். எனவே எங்களின் குடும்ப நிதிச்சுமையை குறைக்கும் வகையில் தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை இதுவரை எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே கலெக்டர் எங்களது எதிர்கால கல்வி மற்றும் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு எங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள செங்களாக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றதொகுதி ஆவூர் ஊராட்சி செங்களாகுடி கிராமத்தில் கலாச்சரம் மற்றும் பண்பாட்டை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்ற தடையால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. தற்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தனி சட்டம் இயற்றி உள்ளது. எனவே எங்களது கிராமத்தில் வருகிற மார்ச் மாதம் 5-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவது என கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் முடிவு செய்து உள்ளோம். எனவே தமிழக அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இதைப்போல கந்தர்வகோட்டை தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (லெனினிஸ்டு ) கட்சியின் சார்பில் கருணாநிதி கொடுத்த மனுவில், பாசிக்குளம் மற்றும் பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்த குளத்தில் சுமார் 10 டன் மரங்களை வெட்டி விற்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிடர் சுடுகாட்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நிலம் இல்லாத அருந்ததியர் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் தலா 2 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். கூரை வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு பசுமை வீடு கட்டிதர வேண்டும். ஆதிதிராவிடர் தெருவில் அங்கன்வாடி மையம் தொடங்க வேண்டும் என கூறியிருந்தார். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப் பதாக கூறினார்.

Next Story