தமிழக அரசியலில் இன்று மாற்றம் ஏற்படும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேட்டி
தமிழக அரசியலில் இன்று மாற்றம் ஏற்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
செந்துறை,
அசாதாரண சூழ்நிலை
அரியலூர் மாவட்டம் செந்துறையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாளை(இன்று) தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும். ஆட்சிக்கு யாரை அழைப்பது என்பதற்காக கவர்னர் டெல்லியை பார்த்துக்கொண்டு இருக்கிறார். கூவத்தூரில் சட்டமன்றம் நடைபெற்று வருகிறது. வெளியில் சத்த மன்றம் நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் யாருக்கு என்ன உத்தரவிடுவது என்று தெரியாமல் உள்ளனர். இதனால் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வீட்டில் மர்ம நபர் துப்பாக்கியுடன் புகுந்த சம்பவம், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எந்த அளவு சீர்கெட்டுள்ளது என்பதை காட்டுகிறது, என்றார்.
மாநாடு
முன்னதாக அரியலூர் மாவட்டம் செந்துறை பஸ் நிலையத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் சாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மண்டல செயலாளர் மணிவண்ணன் மாநாட்டை திறந்து வைத்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் செந்தில்குமார் கட்சி கொடி ஏற்றினார். மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த சிறுமியின் கொலைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, கொலை செய்தவர்கள் அனைவரும் கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்க வேண்டும், என்றார். மாநாட்டில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினரும் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன் நன்றி கூறினார்.

Next Story