பெரம்பலூர்-திருப்பெயர் இடையே அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்
பெரம்பலூர்-திருப்பெயர் இடையே அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்,
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) துரை தலைமை தாங்கி, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார்.
அப்போது அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு தெரியப்படுத்துமாறு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டார்.
அரசு டவுன் பஸ்கள்
பெரம்பலூர் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அதில், திருப்பெயரில் இருந்து பெரம்பலூருக்கு சரிவர பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடிவது இல்லை. மேலும் வேலை நிமித்தமாக வெளியே செல்ல கிராம மக்கள் அதிக பணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்ல வேண்டியிருக்கிறது. எனவே திருப்பெயர்-பெரம்பலூர் இடையே அரசு டவுன்பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், அன்னமங்கலம் கிராமத்தில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு கொடுத்தும், கண்காணிப்புக்குழு அதிகாரிகள் பார்வையிட்டு அனுமதி அளிக்கவில்லை. வருகிற 25-ந் தேதி அன்னமங்கலம் கிராமத்தில் அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்புக்குழு அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு அனுமதி தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
நிதி மோசடி
அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி தலைவர் நிரஞ்சன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அறக்கட்டளை நடத்தி அதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளார். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி தருகிறேன் என மக்களிடம் ஆசை வார்த்தை கூறி பெரும் தொகையை சுருட்டியுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் பல ஏஜெண்டுகள் நியமனம் செய்யப்பட்டு நிதி வசூல் செய்து வருகின்றனர். எனவே அந்த ஏஜெண்டுகளிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏமாற்றப்பட்டோருக்கு பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தனர். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இக்கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் அமர்சிங் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story