திருவண்ணாமலை அ.தி.மு.க. பிரமுகர் கொலையில் சரண் அடைந்தவரின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவண்ணாமலையில் அ.தி.மு.க.பிரமுகர் கொலையில் சரண் அடைந்தவர் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் கார்கள், மோட்டார்சைக்கிள்கள் எரிந்து நாசமாயின.
திருவண்ணாமலை,
அ.தி.மு.க.பிரமுகர் கொலை
திருவண்ணாமலை கார்கானாத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). அ.தி.மு.க.முன்னாள் நகர செயலாளர். முன்பு கவுன்சிலராக பணியாற்றிய இவர் அந்த சமயத்தில் நகர்மன்ற துணை தலைவராகவும் இருந்துள்ளார். இவர், பேட்மிண்டன் விளையாடுவதற்காக அரசு கலைக்கல்லூரிக்கு நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் நண்பர் கண்ணதாசனுடன் மொபட்டில் சென்றார்.
அருணாசலேஸ்வரர் கோவில் திருமஞ்சனகோபுரம் அருகே சென்றபோது அவரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பங்க்பாபு (36), பழைய கார்கானாத்தெருவை சேர்ந்த ராஜா (28), சரவணன் (30) ஆகியோர் அரிவாளால் மாறி, மாறி வெட்டி கொலை செய்தனர்.
இதையடுத்து 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசில் சரண் அடைந்தனர்.
இறுதி ஊர்வலம்
இதனிடையே கனகராஜ் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஈசானிய மயானத்தில் அடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருந்தனர்.
இதனையொட்டி நகரில் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என கருதி நேற்று காலை முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 200-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். குறிப்பாக கொலை செய்யப்பட்ட கனகராஜ் வீடு, இந்த வழக்கில் சரண் அடைந்த பங்க்பாபுவின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
இந்த நிலையில் மதியம் 2½ மணியளவில் பங்க்பாபு அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அங்கு நின்ற 3 கார்கள், 2 மோட்டார்சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்தன.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் 3 கார், 2 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
இறுதி ஊர்வலம்
இதற்கிடையே மாலை 4 மணியளவில் கனகராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது ஊர்வலம் சென்ற பாதையில் இருந்த வீடுகளின் மாடிகளிலிருந்து ஏராளமானோர் சோகத்துடன் பார்த்தனர். ஊர்வலத்தையொட்டி வேலூர் சரக டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி மற்றும் 200 போலீசார் முக்கிய வீதிகள், சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊர்வலத்தின் முன்பாக போலீசாரின் வஜ்ரா வாகனம் சென்றது.
ஊர்வலமானது சன்னதி தெரு, தேரடிவீதி, காந்தி சிலை, சின்னக்கடை தெரு, பஸ் நிலையம், அறிவொளிப்பூங்கா, அவலூர்பேட்டை சாலை வழியாக சென்றது. ஈசானிய மயானத்தை 6.30 மணியளவில் சென்றடைந்தது. அங்கு இறுதி சடங்குகளுக்கு பின்னர் கனகராஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஊர்வலத்தின்போது திருவண்ணாமலை நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பஸ்நிலையத்துக்கு வரும் பஸ்கள் மாற்று இடத்தில் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனால் பயணிகளின்றி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையே அவலூர்பேட்டை சாலை அருகே 2 அரசு பஸ் மற்றும் ஒரு கார் கண்ணாடிகள் கல்வீசி உடைக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story