நாகையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
நாகையில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்,
சாலை மறியல்
நாகை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யவில்லை. அதேபோல் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்து போனது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதன் காரணமாக நாகையில் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலான வார்டுகளில் மாத கணக்கில் குடிநீர் வராமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடங்களை தூக்கிக்கொண்டு தண்ணீருக்கு அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகை கீச்சாங்குப்பம் சேவாபாரதி சுனாமி குடியிருப்பை சேர்ந்த பெண்கள் நேற்று குடிநீர் கேட்டு நாகையில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் சாலை, பழைய பஸ் நிலையம் செல்லும் பிரிவு சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் ஜான்சன், நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சேவாபாரதி குடியிருப்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் சுமார் 9 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் குழந்தைகளை வைத்து கொண்டு பெரும் அவதிப்பட்டு வருகிறோம். எப்போதாவது தண்ணீர் வந்தாலும் ஒரு குடம் தண்ணீர் கூட பிடிக்கமுடியவில்லை. அதற்குள் தண்ணீர் நிறுத்தப்பட்டு விடுகிறது. எனவே சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறினர்.
அப்போது நகராட்சி ஆணையர் ஜான்சன் கூறுகையில், தற்போது டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் டேங்கர் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீர் வேண்டாம். நிரந்தரமாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் கூறினர். அதையடுத்து சேவாபாரதி குடியிருப்பு பகுதிக்கு வரும் பைப் லைனில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை உடனே சரி செய்து நாளை (இன்று) முதல் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் ஜான்சன் உறுதியளித்தார். அதைதொடர்ந்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story