தமிழக கவர்னர் பொறுப்பு நிறைந்தவராக செயல்படுவதில் மகிழ்ச்சி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தமிழக கவர்னர் பொறுப்பு நிறைந்தவராக செயல்படுவதில் மகிழ்ச்சி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 14 Feb 2017 3:45 AM IST (Updated: 14 Feb 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் பொறுப்பு நிறைந்தவராக செயல்படுவதில் மகிழ்ச்சி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில்,

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


நாகர்கோவிலில் நேற்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் அரசியல் நிலவரம் மிக குழப்பம் நிறைந்ததாக உள்ளது. தெளிவு பிறக்க வேண்டும் என்ற சிந்தனையோடு மக்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலை தமிழகத்துக்கு ஏற்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டம். தமிழகத்துக்கு கவர்னர் ஒருவர்தான். ஆனால் அரசியல் கட்சிகள் ஏராளம் உள்ளன.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனது சிந்தனைக்கு தக்கபடி, தனது விருப்பத்துக்கு தக்கபடி கருத்துக்களை சொல்ல முடியும். ஆனால் கவர்னர், தமிழகத்தின் ஒட்டுமொத்த நன்மையை மனதில் வைத்துக்கொண்டு சட்டப்படி எதை செய்ய வேண்டுமோ? அதை பிசகாமல் செய்ய வேண்டிய கடமையில் இருக்கக்கூடியவர்.

மட்டற்ற மகிழ்ச்சி


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சூழ்நிலைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலைகளை எல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு கட்டாயமாக கவர்னருக்கு இருக்கிறது. இதை கவனிக்கவில்லை என்றால் ஏன் கவனிக்கவில்லை என்று வரும். கவனித்தால் ஏன் கவனிக்கிறார் என்று வரும்.

ஒவ்வொருவரும் எதையெல்லாமோ பேசலாம். ஆனால் அந்த பொறுப்பில் இருக்கக்கூடிய கவர்னர், நாம் ரொம்ப பெருமைப்படக்கூடியவராக இருக்கிறார். இப்படிப்பட்ட பொறுப்பு நிறைந்த கவர்னராக அவர் செயல்படுவதிலே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்திருப்பதாக கூறப்படுவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story