நாகர்கோவிலில் துணிகரம்: கேமரா விற்பனையாளர் வீட்டில் 1½ பவுன் நகை-ரூ.2 லட்சம் கொள்ளை
நாகர்கோவிலில் கேமரா விற்பனையாளர் வீட்டில் 1½ பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில், -
இந்த துணிகர கொள்ளை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை-பணம் கொள்ளை
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் மேல ரதவீதியை சேர்ந்தவர் பாபு (வயது 45). ஸ்டூடியோ நடத்தி வருகிறார். மேலும் கேமராக்கள் வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாபு, மனைவி, மகன் மற்றும் தந்தை ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், பாபு வீட்டின் மாடியில் உள்ள பின்புற கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்ததாகவும், பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 1½ பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
குழப்பம்
மேலும் வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றதாக தெரிகிறது.
கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்தது தெரியாமல் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பாபு, காலையில் எழுந்து பார்த்தபோதுதான் கொள்ளை நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகள் வீட்டின் உள்பகுதியிலேயே உள்ளன. ஆனால் வீட்டின் கீழ் பகுதியில் உள்ள முன்புற கதவும், பின்புற கதவும் பூட்டியே இருந்தது.
இந்த நிலையில் கொள்ளையர்களால் எப்படி? மாடிக்கு செல்ல முடிந்தது என்று தெரியாமல் பாபு குழப்பம் அடைந்தார். பின்னர் இதுபற்றி உடனடியாக வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
போலீசார் விசாரணை
பாபு வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தது எப்படி? என்பது பற்றி போலீசாரிடம் கேட்டபோது, ‘பாபுவின் வீட்டையொட்டி அருகருகே பக்கத்து வீடுகள் அமைந்துள்ளன. ஒரு வீட்டின் மாடிக்கு சென்றுவிட்டால் பக்கத்து வீட்டு மாடிக்கும் சுலபமாக சென்றுவிடலாம். இதைப் பயன்படுத்தி எதோ ஒரு வீட்டின் மாடியில் எப்படியோ? ஏறிய மர்ம நபர்கள், மாடிவிட்டு மாடி தாவி குதித்து பாபுவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் செல்போன்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்‘ என்றனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story