குழித்துறையில் ஜனதா தளம் சார்பில் ஆர்ப்பாட்டம்


குழித்துறையில் ஜனதா தளம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறையில் ஜனதா தளம் சார்பில் ஆர்ப்பாட்டம்

களியக்காவிளை,

குடும்ப அட்டையில் ஆதார் எண்ணை பதிக்க தவறிய ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, மண்எண்ணெய், சர்க்கரை ஆகிய பொருட்கள் வழங்க மறுப்பதை கண்டித்து குமரி மாவட்ட இளைஞர் ஜனதா தளத்தின் சார்பில் குழித்துறை விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். மேல்புறம் வட்டார இளைஞர் அணி தலைவர் ராஜாசிங் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுமித்குமார், சத்தியதாஸ், ராஜ சேகரன், அருள் தாஸ், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story