ஓதுவார், அர்ச்சகர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஓதுவார், அர்ச்சகர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 14 Feb 2017 11:39 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் ஓதுவார், அர்ச்சகர் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தோட்டபாளையத்திலுள்ள தனியார் சத்திரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு வேலு£ர் மாவட்ட கலெக்டர் ராமன் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்து தலைமை தா

அணைக்கட்டு,

வேலூரில் ஓதுவார், அர்ச்சகர் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தோட்டபாளையத்திலுள்ள தனியார் சத்திரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு வேலு£ர் மாவட்ட கலெக்டர் ராமன் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்து தலைமை தாங்கினார்.

இந்து சமய வேலூர் மண்டல இணை ஆணையர் அசோக்குமார், வேலூர் இணை ஆணையர் எஸ்,சுப்பிரமணியம் மற்றும் உதவி ஆணையர்கள் முன்னிலை வகித்தனர். காஞ்சீபுரம் தேவராஜசுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் விஜயன் வரவேற்று பேசினர்.

இதில் 150 பேர் கலந்து £ண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். மார்ச் 10–ந் தேதி வரை பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு ஊக்கத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலர் குமரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story