தூத்துக்குடியில் காதலர் தினத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தூத்துக்குடியில் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கொண்டாட்டமும், எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கொண்டாட்டமும், எதிர்ப்பு தெரிவித்து போராட்டமும் நடந்தது.
புறாக்கள் பறக்கவிடும் நிகழ்ச்சிதூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்க வ.உ.சி. கல்லூரி கிளை சார்பில் காதல் தினத்தையொட்டி புறாக்கள் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
சாதி, மத வேற்றுமைக்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும், காதலர் தினத்தை போற்றும் வகையிலும் நடந்த நிகழ்ச்சிக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் புறாக்களை மாணவர்கள் பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அமர்நாத், மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், அஜித், மணிகண்டன், தர்மர், தமிழ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணிதூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் காதலர் தினத்துக்கு எதிராக 2–ம் கேட் வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் அருகே வாழ்த்து அட்டையை எரித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது காதலர் தின வாழ்த்து அட்டைகளை தீவைத்து எரித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, ஆறுமுகம், மாரியப்பன், சிவலிங்கம், வடக்கு மண்டல நிர்வாகிகள் பிரபாகர், முருகேசன், வக்கீல் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.