ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்து இருக்கிறது என்று மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்து உள்ளார். தீர்ப்பை வரவேற்கிறேன் சொத்
பெங்களூரு,
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்து இருக்கிறது என்று மூத்த வக்கீல் ஆச்சார்யா கருத்து தெரிவித்து உள்ளார்.
தீர்ப்பை வரவேற்கிறேன்சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளரவசி ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நேற்று ரத்து செய்து தீர்ப்பு கூறியது. அதாவது பெங்களூரு தனி கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இதுகுறித்து இந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட மூத்த வக்கீல் ஆச்சார்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
“நீதி வென்றுள்ளது. ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி இருப்பதை நான் வரவேற்கிறேன். இந்த வழக்கில் மறைந்த தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு தனி கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது.
யாரும் தப்ப முடியாதுஇதை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கர்நாடக ஐகோர்ட்டு ஏற்று, அவர்கள் மீதான தண்டனையை ரத்து தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பில் சொத்து வருமானங்களை கணக்கிடுவதில் தவறுகள் இருந்ததை நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மிக தெளிவாக எடுத்து கூறினோம். இதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த தீர்ப்பு மூலம் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்பட எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் ஊழல் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது உறுதியாகியுள்ளது. இந்த தீர்ப்பு ஊழல் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஆகும். சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள இந்த தீர்ப்பே இறுதியானது.
தேர்தலில் போட்டியிட முடியாதுஎன்னை பொறுத்தவரையில் கிரிமினல் வழக்குகளில் மேல் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு மிக குறைவு தான். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்கவும் வாய்ப்பு இல்லை. தண்டனை காலத்தை சிறையில் கழித்து தான் ஆக வேண்டும். குற்றவாளிகள் தண்டனை காலம் 4 ஆண்டுகளும், தண்டனை காலத்திற்கு பிறகு 6 ஆண்டுகளும் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆகமொத்தம் குற்றவாளிகள் 10 ஆண்டு காலத்திற்கு தேர்தலில் போட்டியிட முடியாது.
இவ்வாறு மூத்த வக்கீல் ஆச்சார்யா கூறினார்.