குடிபோதையில் தாயை கொடுமைப்படுத்தியதால் ஆத்திரம் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவர் போலீசார் கைது செய்தனர்


குடிபோதையில் தாயை கொடுமைப்படுத்தியதால் ஆத்திரம் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவர் போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 15 Feb 2017 2:00 AM IST (Updated: 15 Feb 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் தாயை கொடுமைப்படுத்தியதால் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

குடிபோதையில் தாயை கொடுமைப்படுத்தியதால் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர் கைது

பெங்களூரு ராஜாஜி நகர் டி.பிளாக் 13–வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் சிவசங்கர் (வயது 45). இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு ரேவந்த் (20), ரோகித் என்ற 2 மகன்கள் உள்ளனர். ரேவந்த் பி.காம். படித்து வருகிறார். ரோகித் தனியார் பி.யூ. கல்லூரியில் படித்து வருகிறார். சிவசங்கர் அடிக்கடி மது போதையில் வீட்டுக்கு வந்து ஜெயலட்சுமியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் இருந்த சிவசங்கர் தனது மனைவி ஜெயலட்சுமியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரேவந்த் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிவசங்கரை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, சுப்பிரமணியநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொலை செய்ததாக ரேவந்தை கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்றொரு சம்பவம்

இதேபோல், பெங்களூரு சவுடேஸ்வரி நகரில் வசித்து வந்த சரவணகுமார் (21) என்பவர் நேற்று காலையில் தனது நண்பருடன் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்ற சரவணகுமாரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். இதில், கத்திக்குத்து காயமடைந்த சரவணகுமார் இறந்தார். இதுகுறித்து காமாட்சிபாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story