மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை


மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை
x
தினத்தந்தி 15 Feb 2017 3:00 AM IST (Updated: 15 Feb 2017 1:42 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சிறு, குறுந்தொழிலுக்கான கடனுதவி வழங்கப்படுகிறது.

காஞ்சீபுரம்,

புதுவாழ்வு திட்டம் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சிறு, குறுந்தொழிலுக்கான கடனுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் மருத்துவ செலவு, உடல் சார்ந்த குறைகளை சரி செய்ய ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வரை பெறலாம். அதன்படி, மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள 244 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு காப்பீட்டு தொகையில் 90 சதவீதம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் சார்பில் செலுத்தப்பட்டது.

இதையடுத்து காப்பீடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட வருவாய் துறை அதிகாரி சவுரிராஜன் மருத்துவ அடையாள அட்டைகளை வழங்கினார். இதில் புதுவாழ்வு திட்ட மேலாளர் தனசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story