ராயபுரம் அருகே கோவில் கட்டிடத்தில் இயங்கிய பாத்திரக்கடைக்கு ‘சீல்’ வைப்பு


ராயபுரம் அருகே கோவில் கட்டிடத்தில் இயங்கிய பாத்திரக்கடைக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 15 Feb 2017 2:06 AM IST (Updated: 15 Feb 2017 2:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பூங்கா நகரில் உள்ள முத்துக்குமாரசுவாமி கோவிலுடன் இணைந்த பு.பாப்பாளம்மாள் உண்ணாமுலை அம்மாள் அறக்கட்டளை

ராயபுரம்,

சென்னை பூங்கா நகரில் உள்ள முத்துக்குமாரசுவாமி கோவிலுடன் இணைந்த பு.பாப்பாளம்மாள் உண்ணாமுலை அம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான அடுக்குமாடி கட்டிடம் தங்கசாலையில் அமைந்துள்ளது.

இந்த கட்டிடத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதே பகுதியை சேர்ந்த ராமேஷ்வரன் என்பவர் பாத்திரக்கடை நடத்தி வந்தார். இவர் கடைக்கான வாடகையை செலுத்தாமல் ரூ.21 லட்சத்து 66 ஆயிரம் நிலுவை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

வாடகை கேட்டு பலமுறை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் அவர் செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் பா.விஜயா தலைமையில் கோவில் அதிகாரிகளும், போலீசாரும் இணைந்து அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த பாத்திரக்கடைக்கு சீல் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கட்டிடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2 கோடி என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story