சிந்தாதிரிப்பேட்டையில் ஆள் இல்லா குட்டி விமானம் பறிமுதல்
சிந்தாதிரிப்பேட்டையில் ஆள் இல்லா குட்டி விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை,

குட்டி விமானம் பறிமுதல்
சென்னையில் ஆள் இல்லா சிறிய ரக விமானங்களில் கேமரா பொருத்தி வானில் பறக்கவிட்டு படம் பிடிக்க போலீசார் தடை விதித்து உள்ளனர். இந்தநிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று காலை ஆள் இல்லா குட்டி விமானத்தை பறக்கவிட்டு 4 வாலிபர்கள் ஆய்வு பணியில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று அந்த ஆள் இல்லா விமானத்தை பறிமுதல் செய்தனர். அதில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவையும் கைப்பற்றினர். ஆய்வு பணியில் ஈடுபட்ட 4 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் 4 பேரும் சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Next Story