எண்ணூர் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி


எண்ணூர் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி
x
தினத்தந்தி 15 Feb 2017 2:26 AM IST (Updated: 15 Feb 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலியானார்.

திருவொற்றியூர்,

எண்ணூர் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலியானார்.

படகு கவிழ்ந்தது

எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 40). மீனவர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சந்திரசேகர், ரகு ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை ஒரு பைபர் படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றார். மீன்களை பிடித்து விட்டு நேற்று காலை அவர்கள் திரும்பிக்கொண்டு இருந்தனர்.

எண்ணூர் முகத்துவாரம் அருகே வந்தபோது திடீரென கடலில் வந்த ராட்சத அலை படகை புரட்டி போட்டது. இதில் படகில் இருந்த 3 பேரும் கடலுக்குள் தவறி விழுந்தனர்.

மீனவர் பலி

ஆனால் பாலு மட்டும் படகுக்கு அடியில் சிக்கிக்கொண்டார். மற்ற 2 பேரும் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பாலுவின் உடலும், படகும் பெரியகுப்பம் அருகே கரை ஒதுங்கியது.

சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story