கூவத்தூர் சொகுசு விடுதியில் அனுமதி இல்லாமல் இருந்ததாக 6 பேர் கைது
சொகுசு விடுதியில் அனுமதியில்லாமல் சந்தேகத்துக்கிடமாக இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
அ.தி.முக. பொதுச்செயலாளர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு அவரை உடனடியாக சரண் அடைய உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதிக்கு அதிரடிப்படை போலீசார் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர்.
உள்ளே சென்ற அவர்கள் சொகுசு விடுதியில் அனுமதியில்லாமல் சந்தேகத்துக்கிடமாக இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
1. முருகேசன்- திருவையாறு, 2. ரவிச்சந்திரன்-மணப்பாக்கம், 3. ராஜமாணிக்கம்-காஞ்சீபுரம், 4. மாசிலாமணி -கூவத்தூர், 5. நாகராஜ் -கூவத்தூர், 6. ராமச்சந்திரன் -திருநெல்வேலி.
இதில் ராமச்சந்திரன் என்பவர் கூட்டுறவுத்துறை அமைச்சரின் வீட்டில் வேலை செய்வதாக கூறினார்.

Next Story