அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பலி
பேரையூர் தாலுகா நாகையாபுரம் காவல்நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக (எஸ்.எஸ்.ஐ) பணியாற்றி வந்தவர் கருப்புசாமி(வயது 53).
பேரையூர்
பேரையூர் தாலுகா நாகையாபுரம் காவல்நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக (எஸ்.எஸ்.ஐ) பணியாற்றி வந்தவர் கருப்புசாமி(வயது 53). இவர் குடும்பத்துடன் கிருஷ்ணன்கோவில் அருகிலுள்ள பிள்ளையார்நத்தத்தில், குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு பணிமுடிந்து டி.கல்லுப்பட்டி காவலர் குடியிருப்பு வந்தார். திருமங்கலம்–ராஜபாளையம் நெடுஞ்சாலையில் உள்ள சோலைப்பட்டி கருப்புசாமி, ஆஞ்சநேயர்கோவில் அருகே வந்து போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே கருப்புசாமி பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்த பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.