ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சொத்து குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
கிருஷ்ணகிரி,
சொத்து குவிப்பு வழக்கு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு அளித்த சிறை தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். கிருஷ்ணகிரியில் 5 ரோடு ரவுண்டானா, பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்டு, ராயக்கோட்டை சாலை மேம்பாலம் ஆகிய இடங்களில் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் வெங்கடாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம், மத்தூர்
காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜமுனா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் நகர அ.தி.மு.க. செயலாளர்கள் வாசுதேவன், அண்ணாத்துரை, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குப்புசாமி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விக்ரம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சசிகலாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். மேலும் எம்.ஜி.ஆர்., பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை தலைவர் அரவிந்தன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் முருகன், ஒன்றிய மாணவர் அணி செயலாளர் சக்தி, ஒப்பந்ததாரர்கள் குமார், முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராயக்கோட்டை-ஓசூர்
இதே போல ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள். தேன்கனிக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஓசூரில் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்க தலைவர் ராஜாரெட்டி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரங்கநாத், செயலாளர் மஞ்சுநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கெலவரப்பள்ளி ஆயக்கட்டு தலைவர் பிரகாஷ், மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோவிந்தன், சிவா, முருகன், மார்க்கெட் தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story