சசிகலாவுக்கு எதிராக பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்திய போலீஸ்காரர்


சசிகலாவுக்கு எதிராக பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்திய போலீஸ்காரர்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:37 AM IST)
t-max-icont-min-icon

சசிகலாவுக்கு எதிராக பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்திய போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

தேனி,

தேனி மாவட்டம், குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சசிகலாவை முதல்–அமைச்சராக பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்தால் சென்னை மெரினாவில் ஜெயலலிதா சமாதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக பேட்டி அளித்தார்.

இந்தநிலையில், நேற்றும் இவர் தேனி நேரு சிலை சிக்னல் அருகே பேட்டி அளிக்கப்போவதாகவும், போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பரபரப்பான தகவல்கள் பரவின. மாலை 6 மணியளவில் நேரு சிலை சிக்னல் அருகே வந்த வேல்முருகனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். உடனே அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விசாரணை நடத்தினார். பின்னர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து, வேல்முருகனை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்படி அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.


Next Story