பாசனத்துக்காக திறக்கப்பட்ட சாத்தனூர் அணை: விவசாயிகள் மகிழ்சசி


பாசனத்துக்காக திறக்கப்பட்ட சாத்தனூர் அணை: விவசாயிகள் மகிழ்சசி
x
தினத்தந்தி 15 Feb 2017 3:30 AM IST (Updated: 15 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் மூங்கில்துறைப்பட்டு பகுதிககு வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்சசி அடைந்துள்ளனர்.

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டம் தண்ராம்பட்டு தாலுகாவில் 119 அடி உயரம் கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா பகுதிக்குட்பட்ட சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் அணையின் நீர்மட்டம் 91 அடியாக இருந்து வந்தது. இந்தநிலையில் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீரை திறகக வேண்டும் என்று விவசாயிகள் அரசுககு கோரிககை விடுத்தனர்.

அணை திறப்பு

அதன்அடிப்படையில் கடந்த 12–ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் அணையில் இருந்து வலது புற கால்வாய், இடதுபுற கால்வாய் என இரு பகுதிகளுககும் தண்ணீர் திறக்கப்பட்டது, இதனையடுத்து வலதுபுற கால்வாய் மூலம் திறந்து விடப்பட்ட தண்ணீரானது விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையான இளையாங்கன்னி கூட்டுசாலை பிரதான கால்வாய் வழியாக மூங்கில்துறைப்பட்டு பகுதிக்கு வந்தது. இந்த தண்ணீர் கிளை வாய்க்கால்கள் மூலம் சங்கராபுரம் தாலுகா பகுதி கிராமங்களான கடுவனூர், பாககம், பெரியகொள்ளியூர், சின்னகொள்ளியூர், மூங்கில்துறைப்பட்டு, பொருவளூர், பொரசப்பட்டு, சவேரியார்பாளையம், மேல்சிறுவள்ளூர், உள்ளிட்ட 48 ஏரிகளுககு தண்ணீர் செல்கின்றது. இதனால் சங்கராபுரம் தாலுகா பகுதி விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.


Next Story