அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆடு, மாடுகளை வதைசெய்ய வேண்டும் மாவட்ட கலெக்டர் தகவல்
நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆடு, மாடுகளை வதைசெய்ய வேண்டும் மாவட்ட கலெக்டர் தகவல்
விருதுநகர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை தொடர்பான வழிக்காட்டுதல் குழுக்கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதில் உணவு பாதுகாப்புத் தரநிர்ணயச் சட்டம்–2006 விதிமுறைகள், உணவு பொருட்கள் கலப்படம் பற்றியும் அதனால் விளையும் நன்ம் தீமைகள் பற்றியும், உணவு பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம்–2006–ன்படி உணவுப்பொருள்கள் விற்பனை, தயாரிப்பு, சத்துணவுக்கூடங்கள், குடியுரிமைப்பொருள் அங்காடிகள், பள்ளி,கல்லூரிகள் உரிமம் டுஉநளெநஃபதிவு சுநபளைவசயவழை, பெறவேண்டும் என்றும், அனைத்து நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து பகுதிகளில் ஆடு, மாடு வதைச் செய்வது அங்கீகரிக்கப்பட்ட வதைச் செய்யுமிடங்களில் மட்டுமே வதைச்செய்யவேண்டும். நல்ல தரமான உணவுகளை கையாள வேண்டும். பாலிதீன் பைகளை தவிர்க்க வேண்டும். சுத்தமான சுகாதாரமான குடிநீரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சாலோடீசன், துணைஇயக்குநர் சுகாதாரப் பணிகள்,அனைத்து நகராட்சி ஆணையாளர்கள்,பஞ்சாயத்து உதவி இயக்குநர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், நுகர்வோர் பாதுகாப்பு தலைவர், ஹோட்டல் சங்க உரிமையாளரின் தலைவர், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்கள்.