குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்


குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் பழையூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

திருப்புவனம்,

திருப்புவனம் பழையூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், திருப்புவனம் பழையூர் மின்சப்ளையை, திருப்புவனம் நகர் மின்சப்ளையுடன் இணைக்க வேண்டும். பேரூராட்சியில் உள்ள 16, 17–வது வார்டுகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும். பழையூர் ஊருணியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். திருப்புவனத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க வேண்டும். பழையூர் மின்சப்ளையை மாற்ற மதிப்பீட்டு கட்டண தொகை ரூ.47 லட்சத்தை மின்வாரியத்திற்கு, பேரூராட்சி நிர்வாகம் உடனே செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த உண்ணாவிரதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரதம் நகர செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. சேதுராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கந்தசாமி உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து பேசினார். உண்ணாவிரதத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, தண்டியப்பன், முத்துராமலிங்க பூபதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மணியம்மாள், தமயந்தி, சண்முக பிரியா, தாலுகா செயலாளர் ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர் அய்யம்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story