கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு இந்து மக்கள் கட்சியினர் அஞ்சலி

கும்பகோணம்,
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 51 போ் உயிரிழந்தனர். குண்டு வெடிப்பில் பலியானவா்களுக்கு இந்து மக்கள் கட்சி சாா்பில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் குருமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவா் ராஜ்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன், நகர பொதுச் செயலாளா் பூக்கடை பாலாஜி, மாவட்ட அமைப்பாளா் சேகா் உள்பட பலர்் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும், குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க கூடாது, பயங்கரவாத செயல்களை தடுக்க நவீன ஆயுதங்களை போலீஸ் துறையினருக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பப்பட்டது.

Next Story