ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் கூட்டம்


ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 3:30 AM IST (Updated: 15 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய அம்மா ஜெ.தீபா பேரவை சார்பில் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.

புதுச்சேரி,

அகில இந்திய அம்மா ஜெ.தீபா பேரவை சார்பில் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சாரம் அன்னை திருமண நிலையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சுகந்திரன் தலைமை தாங்கினார். பேரவை புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் சேகர் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஜெ.தீபா பேரவையின் எஸ்.சி.எஸ்.டி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் இருதயராஜ், வக்கீல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், கதிர்காமம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் குணசேகர், உழவர்கரை தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வரும் 24–ந் தேதி மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் 69–வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களை ஒருங்கிணைத்து புதுவையில் ஜெ.தீபாவின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story