இளம்பிள்ளையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை,
இளம்பிள்ளை பேரூராட்சி 8–வது வார்டு மற்றும் 3–வது வார்டில் உள்ள, சுப்பிரமணிய சாமி கோவில், காய்கறி மார்க்கெட், சவுண்டம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை என்று அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இருப்பினும் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகத்தை சரி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலையில், இளம்பிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சேலம் சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தகவல் கிடைத்ததும், மகுடஞ்சாவடி போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உத்தரவாதம் அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story