விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கார் எரிப்பு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது


விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கார் எரிப்பு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 15 Feb 2017 3:05 AM IST (Updated: 15 Feb 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காரை எரித்த சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

தனிப்படை

திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 40). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 1-ந்தேதி நள்ளிரவு இவருடைய வீட்டு வாசலில் கீற்று கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர். இதுகுறித்து வடிவழகன் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்்தனர். இந்தநிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை எரித்த திருவாரூர் பவித்திர மாணிக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், காட்டூரை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுவன், தஞ்சை ஒரத்தநாட்டை சேர்ந்த வெற்றிவேல் (33) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

Next Story