சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

முத்துப்பேட்டை,
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்தது. இந்த தீர்ப்பை வரவேற்று முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் சிவராமன், மாவட்ட பிரதிநிதி உலகநாதன் ஆகியோர் முன்னிலையில், தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்போது பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் நகர நிர்வாகிகள் ராஜேந்திரன், பத்மநாபன், மீனவர் சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி, மீனவர் சங்க பிரதிநிதிகள் முனியப்பன், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story