ஓமலூரில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓமலூரில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூரில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓமலூர்,

பால் கொள்முதல் விலையை பசும்பால் லிட்டருக்கு ரூ.35 என்றும், எருமை பால் லிட்டருக்கு ரூ.45 என்றும் விலை உயர்த்தி தரக்கோரி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் அரியாக்கவுண்டர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஏழுமலை, அர்த்தனாரி வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தங்கவேல், தலைவர் வெங்கடாஜலம், துணை செயலாளர் ரத்தினவேல், வட்ட செயலாளர் சின்ராஜ், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளர் மோகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இதில் கால்நடைகளுக்கு தீவனங்கள் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும், பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும், விவசாயிகள் பால் உற்பத்தியாளர்கள் வாங்கிய கடன் முழுவதையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story