காதலர் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் ரோஜா பூ ரூ.10–க்கு விற்பனை
காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று நாமக்கல்லில் ரோஜா பூ ரூ.10–க்கு விற்பனையானது.
நாமக்கல்,
காதலர் தினம்
காதலர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. நாமக்கல் நகரிலும் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு காதலர்கள், தங்களது காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையொட்டி நாமக்கல் பஸ்நிலையம், ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மசாமி கோவில், ரெங்கநாதர் கோவில் மற்றும் மலைக்கோட்டை பகுதிகளில் ஆங்காங்கே காதலர்கள் ஜோடியாக சுற்றி திரிவதை காண முடிந்தது. இவர்கள் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்களா? என போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரோஜா பூ விலை உயர்வு
இதுதவிர காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களது காதலிக்கு காதலின் அடையாளமாக ரோஜா பூக்களை வாங்கி கொடுப்பது வழக்கம். எனவே நேற்று ரோஜா பூவுக்கு கடும் கிராக்கி இருந்தது. இதனால் சாதாரண நாட்களில் ரூ.4–க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூக்கள் நேற்று ரூ.10–க்கு விற்பனையானது. காதலர்கள், ரோஜா பூக்களை வாங்கி தங்களது காதலிக்கு அன்பு பரிசாக கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும்போது, சாதாரண நாட்களில் சிவப்பு ரோஜா ரூ.4–க்கு விற்பனை செய்யப்படும். காதலர் தினத்தை முன்னிட்டு ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது. இவை ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து வாங்கி வரப்பட்டவை ஆகும். காதல் ஜோடிகள் மட்டும் இன்றி திருமணமான நபர்களும் தங்களின் காதல் மனைவிக்கு காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூக்களை வாங்கி கொடுக்கிறார்கள். எனவே தான் சிவப்பு ரோஜாவுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது என்றார்.

Next Story