சேலத்தில் காதலர் தின கொண்டாட்டம் பூங்காக்களில் அமர்ந்து அன்பை பகிர்ந்த காதல் ஜோடியினர்


சேலத்தில் காதலர் தின கொண்டாட்டம் பூங்காக்களில் அமர்ந்து அன்பை பகிர்ந்த காதல் ஜோடியினர்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் காதலர் தினம் கொண்டாட்டத்தையொட்டி காதல் ஜோடிகள் பூங்காக்களில் அமர்ந்து அன்பை பகிர்ந்து கொண்டனர்.

சேலம்,

காதலர் தினம்


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14–ந் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக (“வேலண்டைன்ஸ் டே’’) கொண்டாடப்பட்டு வருகிறது. சேலத்திலும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் காதலிகளுக்கு பிடித்த உடைகள், அணிகலன்கள் ஆகியவற்றை பரிசு பொருட்களாக வாங்கி கொடுத்தனர். சிலர் வாழ்த்து அட்டையும், ரோஜா மலர்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.

பூங்காக்களில் குவிந்தனர்


சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான காதல் ஜோடிகள் நேற்று சேலம் அண்ணாபூங்காவுக்கு வந்தனர். அவர்களில் சில காதல் ஜோடிகள் பூங்காவின் ஒதுக்குப்புறமான பகுதியில் அமர்ந்து பேசினர். அதேசமயம், காதலித்து திருமணம் செய்த ஜோடிகளும் பூங்காவிற்கு வந்து மலரும் நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

இதுபோல ஏற்காடு மலைப்பாதையிலும் ஆங்காங்கே காதலர்கள் தடுப்பு சுவர்களில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஏற்காட்டில் படகுதுறை, அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ரோஜா கார்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் காதல் ஜோடியினர் உலாவந்ததை காணமுடிந்தது.

காதல்ஜோடிகள் ஏமாற்றம்


சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு நேற்று விடுமுறை தினம் ஆகும். ஆனால் அது தெரியாமல் பல காதல் ஜோடியினர் மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். பின்னர் விடுமுறை என்பதை தெரிந்து கொண்ட அவர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில காதல் ஜோடிகள் சேலம் மாநகரில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.


Next Story