மேட்டூர், சங்ககிரி பகுதிகளில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு


மேட்டூர், சங்ககிரி பகுதிகளில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர், சங்ககிரி பகுதிகளில் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

சேலம்,

மேட்டூர், சங்ககிரி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் தாலுகா தின்னக்குட்டி, புதுவேலமங்களம், கொளத்தூர், மூலக்காடு ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்க ப்பட்டிருந்த வாழை, மஞ்சள், பருத்தி, சோளம், பப்பாளி ஆகிய பயிர்களை பார்வையிட்டு கலெக்டர் சம்பத் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் இடைப்பாடி தாலுகா வெள்ளரிவெள்ளியில் கரும்பு சாகுபடி செய்த விவசாயி குமாரசாமியிடம் வறட்சி பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அவர் சங்ககிரி தாலுகா தேவண்ணக்கவுண்டனூரில் வறட்சியால் சேதம் அடைந்த சோள பயிரினை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது சாகுபடி செய்யப்பட்ட பயிர், பரப்பளவு, விவசாயின் பெயர், வங்கி கணக்கு எண், ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்டவைகள் முறையாக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வறட்சி நிவாரண கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களிடம், மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருவர் கூட விடுபடாமல், அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பிட்டுத்தொகை கிடைத்திடும் வகையில் சரியான முறையிலும், விரைவாக செயல்பட வேண்டும் என்றும் கலெக்டர் சம்பத் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது சங்ககிரி உதவி கலெக்டர் பால்பிரின்சிலி ராஜ்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story