கோடியக்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு


கோடியக்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2017 4:15 AM IST (Updated: 15 Feb 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரையில் ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்படுகின்றன.

வேதாரண்யம்,

முட்டைகள் சேகரிப்பு

வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடற்பகுதியில் ஆலிவர் ரெட்லி ஆமைகள் தன் இனப்பெருக்கத்திற்காக அங்குள்ள கடற்கரையில் மணலை தோண்டி முட்டைகள் இட்டு மூடி செல்வது வழக்கம். இந்த முட்டைகள் குஞ்சு பொரித்தவுடன் அவற்றை கடலுக்குள் விடுவார்கள். இந்த முட்டைகளை சமூக விரோதிகள் திருடிவிடுவதால் வனத்துறையினர் இந்த ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஊழியர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். நேற்று கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான், வனவர் இளங்கோவன், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் மும்தாஜ் பேகம் மற்றும் பணியாளர்கள் கோடியக்கரை கடல் பகுதியில் 5 இடங்களில் அரியவகை ஆமை முட்டைகளை சேகரித்தனர். இந்த 530 ஆமை முட்டைகளை அங்குள்ள ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். முட்டைகள் 50 நாட்களில் குஞ்சு பொரித்தவுடன் கடலில் விடப்படும். கடந்த 2 மாதத்தில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறையில் 4ஆயிரத்து 75 ஆமைமுட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து குஞ்சு வெளிவந்தவுடன் படிப்படியாக கடலில் விடப்படும் என்று கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார். 

Next Story