நாகையில் 12 பேருக்கு தையல் எந்திரங்கள் கலெக்டர் பழனிசாமி வழங்கினார்


நாகையில் 12 பேருக்கு தையல் எந்திரங்கள் கலெக்டர் பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் 12 பேருக்கு தையல் எந்திரங்கள் கலெக்டர் பழனிசாமி வழங்கினார்

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 233 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவினை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.41 ஆயிரத்து 580 மதிப்பிலான தையல் எந்திரங்களை கலெக்டர் பழனிசாமி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தேன்மொழி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Next Story