பண்ணை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பண்ணை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

பண்ணை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,

பண்ணை தொழிலாளர்கள் சங்க (ஏ.ஐ.டி.யு.சி.) புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் நேற்று புதுக்கோட்டையில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் அரசப்பன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் சிங்கமுத்து, துணை செயலாளர் செங்கோடன் உள்பட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். வேளாண்மைத்துறை பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஆண்டுதோறும் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை. எனவே உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story