தா.பழூர் அரசமரத்தடி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி


தா.பழூர் அரசமரத்தடி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அரசமரத்தடி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் அரசமரத்தடி விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டுஅரசமரத்தடி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அறுகம் புல் மற்றும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தா.பழூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தா.பழூர் பகுதியில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது. 

Next Story