திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்


திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Feb 2017 3:45 AM IST (Updated: 15 Feb 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறியுள்ளார்.

அரியலூர்,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கண்காணிப்புக்குழு

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் சினிமா திரையரங்குகளில், அரசு நிர்ணயம் செய்த பார்வையாளர் அனுமதி கட்டண தொகையை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்திடும் சினிமா திரையரங்குகளை கண்காணித்திடவும், நடவடிக்கை எடுத்திடவும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து நாட்களிலும் பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெறவும் அப்புகார்கள் குறித்து 24 மணி நேரத்திற்குள் தொடர்புடைய திரையரங்குகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ஆய்வு அறிக்கையை அனுப்பிடுமாறு கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புகார்

மேலும் சினிமா திரையரங்குகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டண தொகையை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டால், இதுதொடர்பாக புகார்களை சம்பந்தபட்ட அலுவலர்களின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கான தொலைபேசி எண்ணாகிய 1077 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

Next Story