சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை: ஜெ.தீபா பேரவையினர் கொண்டாட்டம்


சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை: ஜெ.தீபா பேரவையினர் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2017 4:00 AM IST (Updated: 15 Feb 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை: பெருந்துறையில் ஜெ.தீபா பேரவையினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பெருந்துறை,

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு வெளியான செய்தியை அறிந்ததும் பெருந்துறை தொகுதி ஜெ.தீபா பேரவை அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 150–க்கும் மேற்பட்ட தீபா ஆதரவாளர்கள் பெருந்துறை பவானி ரோடு சந்திப்பில் ஒன்று கூடினார்கள். பின்னர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.


Next Story