சசிகலாவுக்கு சிறை தண்டனை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
சசிகலாவுக்கு சிறை தண்டனை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் எம்.ஜி.ஆர். சிலைக்கு பன்னீரால் அபிஷேகம்
திருப்பூர்,
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து திருப்பூரில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். மேலும் எம்.ஜி.ஆர். சிலைக்கு பன்னீரால் அபிஷேகம் செய்தனர்.
பட்டாசு வெடித்தனர்
அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் பொதுச்செயலாளர் சசிகலா ஒரு அணியாகவும், முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் உள்ளனர். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால் இரு தரப்பினரும் கோர்ட்டு தீர்ப்பின் முடிவை அறிந்துகொள்ள மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதை அறிந்த முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் திருப்பூர் பகுதி ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்பு திரண்டனர். பின்னர் பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.
பன்னீரால் அபிஷேகம்
அதன்பிறகு பாட்டில், பாட்டில்களாக தாங்கள் வாங்கி வந்த பன்னீரால் எம்.ஜி.ஆர். சிலைக்கு அபிஷேகம் செய்தனர். ‘தர்மம் வென்றது, தமிழகத்துக்கு விடிவு காலம் பிறந்தது’ என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அணி, அணியாக வந்து எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து உற்சாகத்துடன் சென்றார்கள்.
இதுபோல், சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததை அறிந்ததும் திருப்பூர் கோர்ட்டு வளாகம் முன்பு சில வக்கீல்கள் பட்டாசு வெடித்தனர். அதுபோல் பென்னி காம்பவுண்டு பகுதியில் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பூலுவப்பட்டி நால்ரோட்டில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.
ஜெ.தீபா பேரவை
ஜெ.தீபா பேரவை திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி தலைமையில் நிர்வாகிகள் பழனிச்சாமி, பாலு, விஸ்வநாதன், மகளிரணி நிர்வாகிகள் சாவித்திரி தேவி, விஜயலட்சுமி உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு வந்து மாலை அணிவித்தனர். பின்னர் பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.
இது குறித்து அவர்கள், சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்பதாகவும், மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வந்துள்ளது என்றும், வருகிற 24-ந் தேதி தீபா அறிவிப்புக்கு பின்னர் அடுத்தகட்ட செயல்பாட்டை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Next Story