நாசிக் அருகே பஜ்ரங் தளம் கட்சி மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல்
நாசிக் அருகே பஜ்ரங் தளம் கட்சியின் மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
நாசிக்,
நாசிக் அருகே பஜ்ரங் தளம் கட்சியின் மாவட்ட செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
மாவட்ட செயலாளர்பஜ்ரங் தளம் கட்சியின் நாசிக் மாவட்ட செயலாளர் மச்சீந்திர சிர்கே. இவர் நேற்று பகல் 11.30 மணியளவில் மும்பை– ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் மாலேகாவ் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு சுமார் 15 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் சிலர், அவரது காரை வழிமறித்தனர். பின்னர், மச்சீந்திர சிர்கேவை காரில் இருந்து வெளியே பிடித்து இழுத்து உருட்டுக்கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில், அவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
பரபரப்புஇதைத்தொடர்ந்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது. இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவத்தால் மாலேகாவில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடியவர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.