ஸ்ரீவைகுண்டம் அருகே மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரவிகுமார் வழங்கினார்


ஸ்ரீவைகுண்டம் அருகே மனுநீதிநாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ரவிகுமார் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Feb 2017 3:00 AM IST (Updated: 16 Feb 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வழங்கினார்.

ஸ்ரீவைகுண்டம்,

ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வழங்கினார்.

மனுநீதி நாள் முகாம்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அணியாபரநல்லூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வருவாய் துறையின் மூலம் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விபத்து மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரணத்தொகை ஒரு பயனாளிக்கு, ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500–ம், நலிந்தோர் உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும், விதவை, மாற்றுத்திறனாளி, முதியோர் உதவித்தொகை என 32 பயனாளிகளுக்கு, மாதந்தோறும் தலா ரூ.1,000 பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 10 பேருக்கு புதிய ரே‌ஷன் கார்டு வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 3 பேருக்கும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3 பேருக்கும், பசுமை வீடுகள் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3 பேருக்கும் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.

மாணவ, மாணவிகளுக்கு பரிசு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 10 பேருக்கு வேலை அடையாள அட்டையும், ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் ஒருவருக்கு தையல் எந்திரம், தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கான கடனுதவியும் வழங்கப்பட்டது. விளையாட்டு துறையின் சார்பில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கலந்து கொண்டவர்கள்

தூத்துக்குடி உதவி கலெக்டர் தீபக் ஜேக்கப், பயிற்சி கலெக்டர் ராஜகோபால சங்கரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பிச்சை, மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் காமராஜ், கால்நடை துறை இணை இயக்குனர் ராமசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முத்து எழில், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாத்திமா, ஆதி திராவிடர் நல அலுவலர் கமலம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன், வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், தாசில்தார் செல்வபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story