அகல ரெயில் பாதை பணிக்கு ஆய்வு ரெயில் சென்றதால் செங்கோட்டை–நெல்லை பயணிகள் ரெயில் 45 நிமிடம் தாமதம்
செங்கோட்டை–புனலூர் அகல ரெயில் பாதை பணிக்கு ஆய்வுக்கு செல்லக்கூடிய ரெயில் நெல்லையில் இருந்து சென்றதால் செங்கோட்டை–நெல்லை பயணிகள் ரெயில் 45 நிமிடம் தாமதமாக வந்தது.
நெல்லை,
செங்கோட்டை–புனலூர் அகல ரெயில் பாதை பணிக்கு ஆய்வுக்கு செல்லக்கூடிய ரெயில் நெல்லையில் இருந்து சென்றதால் செங்கோட்டை–நெல்லை பயணிகள் ரெயில் 45 நிமிடம் தாமதமாக வந்தது.
பயணிகள் ரெயில்செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு தினமும் பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல் நெல்லையில் இருந்தும் செங்கோட்டைக்கு பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 6–45 மணிக்கு புறப்படும் ரெயில் காலை 8–45 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்து சேரும்.
இந்த ரெயிலில் பள்ளி, கல்லூரிகள், பாலிடெக்னிக் படிக்கின்ற மாணவ–மாணவிகள், அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலையில் செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு வரக்கூடிய பயணிகள் ரெயில் வழக்கம் போல் புறப்பட்டு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்திற்கு 7–10 மணிக்கு வந்தது. அங்கிருந்து ரெயிலை எடுக்கவில்லை. அப்போது தான் செங்கோட்டை –புனலூர் அகல ரெயில்பாதை பணி ஆய்வுக்கு செல்கின்ற சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்வதால் தான் காலதாமதம் என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 7–32 மணிக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை ஆய்வு ரெயில் கடந்து சென்றது. பின்னர் 7–35 மணிக்கு பயணிகள் ரெயில் அங்கு புறப்பட்டு சென்றது.
45 நிமிடம் தாமதம்மேலும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் அருகில் நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்கின்ற ரெயிலுக்காக செங்கோட்டையில் இருந்து வந்த ரெயிலுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அங்கு 20 நிமிடம் ரெயில் நின்றது. பின்னர் சிக்னல் கிடைத்த பின்னர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு காலை 9.30 மணிக்கு அதாவது 45 நிமிடம் தாமதமாக வந்து சேர்ந்தது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.