மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நாளை தொடங்குகிறது
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:–
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:–
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வணிகவியல் துறையும், புதுடெல்லி பெண்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்த உள்ளது.
முகாமில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு, அரசியல் அமைப்பில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டவிதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் உறுப்பு கல்லூரி மாணவிகள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ள பொது மக்களும் முகாமில் கலந்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவிகள் பேராசிரியை ரேவதி (9442781692), உதவி பேராசிரியர்கள் ராஜமன்னார் (9442025363), நித்யா (9865797069) ஆகியோரிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.