எரிசாராயம் கடத்தி விற்ற வழக்கு ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


எரிசாராயம் கடத்தி விற்ற வழக்கு ஒருவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 16 Feb 2017 2:52 AM IST (Updated: 16 Feb 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி ஐ.ஆர்.டி. ரோடு சாமிரெட்டிக்கண்டிகையை சேர்ந்தவர் எல்.வி.மணி என்கிற சுப்பிரமணி (வயது 48).

திருவள்ளூர்,

கும்மிடிப்பூண்டி ஐ.ஆர்.டி. ரோடு சாமிரெட்டிக்கண்டிகையை சேர்ந்தவர் எல்.வி.மணி என்கிற சுப்பிரமணி (வயது 48). எரிசாராயம் கடத்தி விற்ற வழக்கில் இவரை பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில் எரிசாராயம் விற்ற வழக்கில் சுப்பிரமணி 4 முறை குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஒரு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ளார் என்பதும் தெரியவந்தது. அவர் மீது ஆரம்பாக்கம் போலீசில் 3 வழக்குகளும், பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகளும் உள்ளன. இதையடுத்து சுப்பிரமணியை குண்டர்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், கலெக்டர் சுந்தரவல்லிக்கு பரிந்துரை செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர், சுப்பிரமணியை குண்டர்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை பெரியபாளையம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் சென்னை புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள். 

Next Story