வறட்சி பாதித்த பகுதிகளை கலெக்டர் கணேஷ் ஆய்வு


வறட்சி பாதித்த பகுதிகளை கலெக்டர் கணேஷ் ஆய்வு
x
தினத்தந்தி 16 Feb 2017 4:00 AM IST (Updated: 16 Feb 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி பாதித்த பகுதிகளை கலெக்டர் கணேஷ் ஆய்வு

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளத்தூர், அவ்வையார்பட்டி, கல்குத்தான்பட்டி ஆகிய வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களின் விவரம், பயிர்க்காப்பீடு செய்யப்பட்ட விவரம் போன்ற பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல்பிரபு, வட்டாட்சியர்கள் சதீஷ், கிருஷ்ணவேணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

Next Story