வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்


வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2017 2:59 AM IST (Updated: 16 Feb 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

கரூர்,

போராட்டம்

கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சத்துணவு நேர்முக உதவியாளர் அலுவலகம் முன்பு நேற்று மதியம் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த போராட்டத்தில், இறந்த சத்துணவு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். கூடுதல் சத்துணவு மைய பொறுப்பாளர்களுக்கு ஒரு ஆண்டாக வழங்காமல் உள்ள பொறுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். சமையல் உதவியாளர் களுக்கு, சமையலர் பதவி வழங்க வேண்டும்.

பணியிட மாறுதல்

காலிப்பணியிடங்களில் மாறுதல் கேட்கும் சத்துணவு ஊழியர்களுக்கு, பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியர் களுக்கு, அரசு உத்தரவுபடி சிறப்பு ஊதிய உயர்வு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் சிவகாமி நன்றி கூறினார். 

Next Story