மாவட்டம் முழுவதும் பிளஸ்–2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரம் 74 மையங்களில் நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் 74 மையங்களில் பிளஸ்–2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல்,
பிளஸ்–2 தேர்வு
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பிளஸ்–2 தேர்வு வருகிற மார்ச் மாதம் 2–ந் தேதி தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் மொத்தம் 29 ஆயிரத்து 832 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர்.
இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 74 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் செய்முறை தேர்வு தொடங்குகிறது.
விடைத்தாள் தைக்கும் பணி
இதற்கிடையே தேர்வுக்கு தேவையான விடைத்தாள்கள் அந்தந்த மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இவற்றை சேர்த்து தைக்கும் பணி அந்தந்த மையங்களில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:– பிளஸ்–2 விடைத்தாள்களை பொறுத்த வரையில் மொழிப்பாடத்திற்கு 30 பக்கம் கொண்ட கோடிட்ட தாள்கள் ஒன்றாக தைக்கப்படுகின்றன. தாவரவியல் பாடத்திற்கு 22 பக்கங்கள் கொண்ட ‘மெயின்ஷீட்’ உடன் கூடுதலாக 4 பக்கங்கள் சேர்த்தும், விலங்கியல் பாடத்திற்கு 22 பக்கங்கள் கொண்ட ‘மெயின்ஷீட்’ மட்டும் முதல் பக்கத்துடன் சேர்த்து தைக்கப்பட்டு வருகிறது.
கணக்கு பதிவியல் பாடத்திற்கு முதல் 14 பக்கங்கள் கோடிட்ட தாள்களும், 15 முதல் 46 வரை அக்கவுண்ட்ஷீட் தாள்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு 30 பக்கங்களை இணைத்தும் தைக்கும் பணி நடந்து வருகிறது. இதர பாடங்களுக்கு 38 பக்கங்களை இணைத்து தைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story