சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

சேலம்,
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தலைமை தாங்கினார். துணை போலீஸ் கமிஷனர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உதவி கமிஷனர் பாரதி வரவேற்றார். இதில் சாலை விபத்துகளை தடுப்பது குறித்தும், மாணவ, மாணவிகளிடையே ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வுகள் குறித்தும், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் மாநகரத்தில் முற்றிலும் விபத்தை தடுப்பதற்கான பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story