ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சிறு வியாபாரிகளுக்கு பாதிப்பு இருக்காது கலால், சுங்கவரி ஆணையாளர் கண்ணன் பேட்டி
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் சிறுவியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என சேலத்தில் நடந்த கருத்தரங்கில் கலால், சுங்கவரி ஆணையாளர் கண்ணன் கூறினார்.
சேலம்,
கருத்தரங்கம்
சரக்கு மற்றும் சேவைகள் மீதான விதிக்கப்பட்ட அனைத்து மறைமுக வரிவிதிப்புகளை அகற்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை (ஜி.எஸ்.டி) நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘‘ஜி.எஸ்.டி–சரக்கு மற்றும் சேவை வரி சிக்கல்கள்–தாக்கங்கள்‘‘ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள சென்னீஸ் கேட்வே ஓட்டலில் நேற்று நடந்தது.
இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் இருந்து வணிகர்கள், உற்பத்தியாளர்கள், சேவைதாரர்கள் மற்றும் நுகர்வோர்கள் என 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆணையாளர் விளக்கம்
பின்னர், அவர்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள் குறித்தும், சட்ட நுணுக்கங்கள் குறித்தும் கோவை, சேலம் சரக மத்திய கலால் மற்றும் சுங்கம், சேவை வரித்துறை ஆணையாளர் கண்ணன் விளக்கம் அளித்து பேசினார்.
சேலம் மாவட்ட நகை வியாபாரிகள் சங்க தலைவர் மாணிக்கம், ஈரோடு அனைத்து வர்த்தக மற்றும் தொழில் சங்க தலைவர் சிவநேசன், சேலம் பிளாட் ஊக்குவிப்பு சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார், சேலம் மாவட்ட சிறு வர்த்தகம் மற்றும் சிறு தொழில் சம்மேளன தலைவர் என்ஜினீயர் மாரியப்பன், சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.
பேட்டி
இது குறித்து கோவை, சேலம் சரக மத்திய கலால், சுங்கம் மற்றும் சேவை வரித்துறை ஆணையாளர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு திட்டத்தை வருகிற ஜூலை மாதம் முதல் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக வணிகர்கள், தொழில்துறையினர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கு கீழ் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதால் எந்த பாதிப்பும் இருக்காது. வியாபாரிகள் தங்களது கணக்குகளை முறையாக தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும், கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாதவர்களை வருமான வரித்துறை மூலம் கண்டு பிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story